
மீனம் – குருப்பெயர்ச்சி பலன்கள்
1. எதிலும் நிதானமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குருபகவான் இப்போது நான்காம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், தடங்கல்கள் நீங்கும். செயலில் வேகம் பிறக்கும். சகல வகைகளிலும் புதிய தொடர்புகளும், அவற்றால் ஆதாயங்களும் உண்டாகும்.
2. நான்கில் அமரும் குருபகவான் இனம்புரியாத சலிப்பையும் வெறுமையையும் உண்டாக்கலாம். செலவுகளும் தொடர்ந்து வரும். சவால்களைச் சமாளிக்க இயலுமா என்று மலைப்பு உண்டாகும். தாயாருக்குச் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம்.
3. உங்களுக்கு சில கூடாபழக்கவழக்கங்கள் தொற்றிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. கவனமாக இருக்கவேண்டும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். காலில் அடிபடும். நீர், நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாகக் கையாளுங்கள். அலைச்சல் இருக்கும். சேமிப்புகள் கரையும்.
4. நட்பு வட்டாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய வீண் விமர்சனங்களைப் புறந்தள்ளுங்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். சிறு சிறு விபத்துகள் உண்டாக வாய்ப்பு உண்டு. அதேபோல் வீடு-மனை வாங்குவதிலும் விற்பதிலும் கவனமாகச் செயல்படவேண்டும்.
5. குருபகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால், பயணங்கள் உண்டு. அவற்றால் ஆதாயமும் ஏற்படும். எல்லாவகையிலும் செல்வாக்கு அதிகரிக்கும்.
6. குருபகவான் 10-ம் இடத்தைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பதவி-சம்பள உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சிலருக்கு வேறு நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
7. குரு பகவான் 12-ம் இடத்தைப் பார்ப்பதால், எல்லா வகையிலும் வெற்றி அடையும் யோகம் கூடிவரும். மறைமுகப் பணவரவு உண்டு. எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம்.
8. வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். லாபம் குறையாது. வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கையாளுங்கள். புதிய வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லவேண்டாம். கெமிக்கல், பர்னிச்சர் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் கொஞ்சம் முரண்படுவார்கள்.
9. உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. எனினும் நிறைவில் உங்களுக்குச் சாதகமான நிலையே உருவாகும்.

10. இந்தப் பெயர்ச்சியில் குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள். கணினித் துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் கிடைப்பதில் சிற்சில தடைகள் இருந்தாலும் முடிவு சாதகமாக அமையும்.
11. வியாழக்கிழமை அன்று, தஞ்சைக்கு அருகில் உள்ள தென்குடித்திட்டை தலத்துக்குச் சென்று அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்- உலகநாயகி அம்மையையும், குருபகவானை யும் மனதார வணங்கி வழிபட்டு வாருங்கள். மட்டுமன்றி, பிரதோஷ தினங்களில் அருகிலுள்ள சிவாலயத்தில் வில்வம் சமர்ப்பித்து ஈசனை வழிபட்டு வாருங்கள்; தடைகள் நீங்கி வெற்றிகள் கைகூடும்.