
புதுடெல்லி: ‘போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் வர்த்தகம் நிறுத்தப்படும்’ என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை, ட்ரம்ப்பின் வர்த்தக அச்சுறுத்தல் கூற்று உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அவற்றுக்கு பதிலளித்த ரந்திர் ஜெய்ஷ்வால், "ஜம்மு காஷ்மீர் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் பாகிஸ்தானுடன் இருதரப்பு ரீதியாக மட்டுமே விவாதிக்கப்படும் என்பது இந்தியாவின் நீண்டகால கொள்கை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவது மட்டுமே நிலுவையில் உள்ள ஒரே பிரச்சினை.