
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது.
இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து பேசிவந்தது. இதையடுத்து கடந்த மே 10 ம் தேதி தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பஹல்கம் தாக்குதலுக்கு பிறகு, “தீவிரவாதிகளையும், அவர்கள் பின்னால் இருப்பவர்களையும் விரைவில் கண்டிபிடித்துக் கடுமையாக தண்டனை வழங்கப்படும்” என்று பேசியிருந்தார் பிரதமர் மோடி.
நேற்று (மே 13ம் தேதி) சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு பேசியிருக்கும் மோடி, “இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம். எந்தவொரு அணு ஆயுத அச்சுறுத்தலையும் இந்தியா அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்காது.” என்று பேசியிருந்தார்.
நேற்று இரவு 8 மணியளவில் மோடி பேசிக்கொண்டிருக்கும் போதே பஞ்சாப் அமிர்தசரஸ் கோவில் இருக்கும் பகுதி முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அமிர்தசரஸில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில் பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதலுக்காகக் குறி வைப்பதாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்துவதாக பதற்றம் ஏற்பட்ட நிலையில், அமிர்தசரஸில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்திய ராணுவம் போர் விமானங்களை வானில் உலவவிட்டு உயர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் மோதலில் இந்த ஆதம்பூர் விமானப் படைத் தளம் மிக முக்கிய பங்காற்றியது. இதன் காரணமாக பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, விமானப்படை வீரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது பேசியிருக்கும் பிரதமர் மோடி, “நாட்டுக்காக தங்களது இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளனர். அணு ஆயுத மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம். விமானப்படை வீரர்கள் புது வரலாற்றை படைத்துள்ளனர். அணு குண்டை வைத்து மிரட்டல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் எதிரிகளுக்கு இந்தியப் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கும்போது ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் எங்கும் எதிரொலிக்கும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது வழக்கமான ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. இந்தியா மீது கை வைத்தால் அதன் விளைவு அழிவு மட்டுமே என்பதைப் பயங்கரவாதிகள் இப்போது உணர்ந்துள்ளனர். அப்பாவி மக்களை ரத்தம் சிந்த வைத்தால் அழிவைத் தருவோம். தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் பாகிஸ்தான் ராணுவத்தைப் பணிந்து போக வைத்துள்ளோம்.” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
