
‘ஜெய் ஹனுமன்’ படத்தை மைத்ரி நிறுவனத்துடன் இணைந்து டி-சீரிஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது.
‘ஹனுமன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களிடம் கதைகள் கூறினார் இயக்குநர் பிரசாந்த் வர்மா. இறுதியாக ரிஷப் ஷெட்டி நடிக்க ‘ஜெய் ஹனுமன்’ படத்தை இயக்கவிருப்பதாக பிரசாந்த் வர்மா அறிவித்தார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
‘ஜெய் ஹனுமன்’ படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தாலும், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பதே தெரியாமல் இருந்தது. ஏனென்றால் ‘காந்தாரா’ 2-ம் பாகத்தின் பணிகளில் தீவிரமாக பணிபுரிந்து வந்தார் ரிஷப் ஷெட்டி. தற்போது ‘ஜெய் ஹனுமன்’ படத்தின் தயாரிப்பில் இணைந்திருக்கிறது டி-சீரிஸ் நிறுவனம்.