
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
சுற்றுலா என்ற வார்த்தையே உற்சாக உணர்வு தரக்கூடியது. வருடத்தில் அனைத்து நாட்களிலும் பள்ளி, கல்லூரி, பரீட்சை, சமையல், உற்றார் உறவினர் வீட்டில் விசேஷங்கள், வேலை, குழந்தை வளர்ப்பு, திருமணம் முதலான பல சடங்குகள் என வாழ்க்கை ஆண், பெண், கணவன், மனைவி, குழந்தைகள், கல்லூரி மாணவ மாணவியர்கள் என அனைவரும் பம்பரமாக சுழன்று கொண்டே இருக்கும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுபட்டு வேலை, சமையல், சரியான நேரத்திற்கு புறப்படுதல் போன்ற கடமைகளில் இருந்து சிறிது ஓய்வு கொடுப்பது சுற்றுலா ஆகும்.
குறைந்தபட்சம் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் சுற்றி பார்க்கும் அளவில் தயாராக வேண்டும். பொருளாதாரம் ஒரு பொருட்டுதான் என்றாலும் அவரவர் சக்திக்கேற்ற இடங்களை தேர்வு செய்யலாம்.
நாங்கள் சமீபத்தில் சென்ற இடம் நெல்லியம்பதி. ஊட்டி, கொடைக்கானல், மூணார், வயநாடு போன்ற அதிக மக்கள் கூடும் இடம் அல்ல என்பதுதான் இதன் சிறப்பியல்பு.
பாலக்காடு மாவட்டத்திலுள்ள மலைவாஸ்தளம் தான் நெல்லியம்பதி. நெல்லியம்பதியின் நுழைவாயில் போத்தண்டி அணை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் நெல்லியம்பதி அமைந்துள்ளது. மேகக் கூட்டங்கள் சேர்ந்த இம்மலைகள் பார்ப்பவர்கள் மன அமைதியும் உற்சாகத்தையும் தரக்கூடியது. மேலும் இங்கு செல்ல வேண்டிய காலகட்டம் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை.

எப்பொழுது மழை பெய்யும் வெயில் அடிக்கும் என்று சொல்லவே முடியாதப் பருவம். லேசான சாரல் மழையும் இதமான குளிர்காற்றும் கையில் ஒரு தேநீர் கோப்பை மற்றும் சூடான பலகாரம் என திட்டமிடாமலே தருணங்கள் அமைந்தன.
ஜீப் சவாரி மூலம் வெவ்வேறு காட்சி முனைகளைச் சென்று கண்டுகளிக்கலாம். மழை கொட்டோ கொட்டுடென்று கொட்டித்தீர்த்துக் கொண்டு இருந்த சூழலுடன் பாறைகளையே பாதையாக்கி காட்டுக்குள் லாவகமாக ஜீப் ஓட்டி சென்றதை ஆச்சரியமாக ரசித்தபடி ஆனந்தமாய் பயணித்தோம்.
கரடு முரடான பாதையில் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் என்ற பின் அவ்விடத்தின் அழகினையும் அவ்விடம் தந்த அனுபவத்தையும் சில்லென்ற காற்று லேசான மழை ஆகியவற்றை அனுபவிக்க முடிந்தது.

மேகக் கூட்டங்களை பிரிந்து கிளம்ப மனம் இல்லாமல் கிளம்பி சென்றோம். மேலும் நெல்லியம்பதி ஆரஞ்சு பழத்தோட்டத்தில் வெவ்வேறு வகையான பழ மற்றும் காய்கறி பயிர்கள் ஆகியவற்றை பார்வையிட்டபடி தேவையானளவு வாங்கிக்கொண்டு கீழிறங்க தயாரானோம்.
இங்கு வாங்கிய டீ தூள் மிகுந்த நறுமணத்துடன் இருந்தது. அத்துடன் தேனும் மகரந்த தூளின் சுவையுடன் தூயதாக இருந்தது. அந்தி சாய்ந்து சூரியன் மறையும் வேளையில் மேகக்கூட்டங்கள் ஓட நாங்கள் கீழே இறங்க ஆரம்பித்தோம். குறைந்த பொருட்செலவில் மனம் நிறைந்த ஒரு சுற்றுலா பயணம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.