• May 13, 2025
  • NewsEditor
  • 0

2025 மே -30-ம் தேதி காரைக்குடி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் (நகரத்தார் கோயில்) கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக…

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

திருவிளக்கு பூஜை

உலகளாவிய அளவில் காரைக்குடி நகரம் பாரம்பரியமிக்க நகரென அறியப்படுகிறது. செட்டிநாடு என்றும் கல்வி நகரம் என்றும் போற்றப்படுகிறது. பாரம்பர்ய வீடுகளும் சுவையான உணவு வகைகளுக்கும் புகழ்பெற்றது காரைக்குடி. காரைக்குடி கண்டாங்கி சேலை புகழ்பெற்றது. சிறப்புகள் பல கொண்ட இந்நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வருகிறாள் ஸ்ரீமீனாட்சி. ஆம், மதுரையம்பதி போலவே இங்கேயும் சொக்கநாதரோடு அன்னை மீனாள் விழி மூடாது காவல் செய்து வருகிறாள். நகரத்தாரால் சிறப்பாக நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம் காரைக்குடி நகரின் மற்றொரு அடையாளமாக விளங்கி வருகிறது. தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகள் தீர்க்கும் கோயிலாக ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

நின்ற கோலத்தில் ஒயிலாக நிற்கும் மீனாட்சியைக் கண்டாலே கவலைகள் பறக்கும்; காரியங்கள் நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள். இங்கு வந்து மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தரிசித்து வேண்டிக்கொண்டால் காரிய ஸித்தி உண்டாகும் என்கிறார்கள். சொத்து சேரவும், சோதனைகள் தீரவும், தொழில்-வியாபார விருத்தி பெருகவும் வரமருளும் ஆலயம் இது. மேலும் திருமணம் வரம், பிள்ளை வரம் அருளும் அன்னை எங்கள் மீனாட்சி என்று பெண்கள் இவளைப் போற்றுகிறார்கள்.

வேண்டியதை வேண்டியவாறே அருளும் இந்த மீனாட்சியை திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும். குடும்ப கஷ்டங்கள் நீங்கும். பணியிடத்தில் உருவாகும் பிரச்னைகள் விலகும். எதிரிகள் தொல்லை தீரும். மேலும் அன்னை மீனாட்சியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.

திருவிளக்கு பூஜை

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *