
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று சொன்னவர்கள் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்கள்.
சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். நடிகர் சல்மான் கான் கூட போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுவிட்டு பின்னர் அதனை நீக்கிவிட்டார்.
இதே போன்று பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போரை நிறுத்தும்படி சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் பலரும் சோனி ரஸ்தான் மற்றும் நடிகை ஆலியா பட் ஆகியோரின் தேச பக்தி குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.
சோனியின் பதிவுக்கு ஒரு நெட்டிசன் வெளியிட்டிருந்த பதிவில், ”அமைதிதான் குறிக்கோள் என்றாலும், மோதலை யார் உண்மையிலேயே ஆதரிக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம்.
நமது வீரர்கள் மிகுந்த கவனத்துடன் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.
ஆனால் எதிரிப் படைகள் குடியிருப்புப் பகுதிகளை வெளிப்படையாகத் தாக்கி பொதுமக்களைக் கொல்கின்றனர். நமது மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து நமது எல்லைகளைப் பாதுகாக்கின்றனர்.
ஆனால் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று இந்தியாவின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கும் ஒரு நடிகையின் தாயார் இவ்வாறு பொறுப்பற்று பேசுவது கவலையளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், ”நீங்கள் ராசி படத்தில் நடித்துள்ளீர்கள் என்று நம்பவே முடியவில்லை. மீண்டும் ஒரு முறை அந்தப் படத்தை நீங்கள் பாருங்கள். அதன் பிறகு அமைதி குறித்துப் பேசுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள சோனி ரஸ்தான், “இந்தியாவிடம் அமைதி காக்கும்படி கூறவில்லை. பாகிஸ்தானை நோக்கித்தான் அமைதி குறித்துப் பேசினேன். அவர்கள்தான் ஆக்கிரமிப்பாளர்கள்.

நாம் பதிலடிதான் கொடுக்கிறோம். நான் பொதுவான அறிக்கைதான் வெளியிட்டேன். போர் என்பது பயங்கரமான ஒன்று. போரில் ஈடுபட்ட யாரும் அதனை விரும்பமாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சோனி ரஸ்தானின் மகள் நடிகை ஆலியா பட் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். ஆலியா பட் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், சோனி ரஸ்தான் பிரிட்டனைச் சேர்ந்தவர்.
சோனி ரஸ்தானைக் காட்டி ஆலியா பட் பிரிட்டன் பாஸ்போர்ட் எடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் ஹாலிவுட் பட அறிமுக விழாவில் பேசிய ஆலியா பட் தனக்குப் பிரிட்டன் பாஸ்போர்ட் இருப்பதை உறுதிப்படுத்தினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…