• May 13, 2025
  • NewsEditor
  • 0

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகின படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியாகின இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடினர். இப்படத்தின் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கரோனா பரவல் காரணமாக இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால், இப்படம் திரையரங்கில் வெளியாகியிருந்தால் இன்னும் கொண்டாட்டமாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சார்பட்டா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை பா.ரஞ்சித் வெளியிட்டார். ஆனால், அதன்பிறகு அப்படம் தாமதம் ஆனது. பா.ரஞ்சித் ‘தங்கலான்’ படத்தில் பிசியானார். தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *