• May 13, 2025
  • NewsEditor
  • 0

ஆர்யா தயாரிப்பில், சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு, படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தானம், இயக்குநர் பிரேம் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டிடி நெக்ஸ்ட் லெவல் – சந்தானம்

அப்போது, பத்திரிகையாளர் ஒருவர், “சிம்புவுடனான நட்புக்காக மீண்டும் காமெடியனாக அவருடைய படத்தில் நடிக்கிறீங்க.

பழைய பிரஸ் மீட்ல அரசியல் பக்கம் போக மாட்டீங்கனு சொல்லிருந்தீங்க. இப்போ உங்க நண்பர் உதயநிதி, வந்து பார்த்தா ஹெல்ப் பண்ணுனு, அடுத்த மே மாதம் கூப்பிட்டா, பிரசாரத்துக்கு போற ஐடியா இருக்கா?” என்று கேள்வியெழுப்பினார்.

உதயநிதி - சந்தானம்
உதயநிதி – சந்தானம்

அதற்கு சந்தானம், “அரசியல் பொறுத்தவரைக்கும் நான் சொல்றது என்னனா, நீங்க உழைச்சா உங்களுக்குச் சாப்பாடு, நான் உழைச்சா எனக்குச் சாப்பாடு.

இதைத் தவிர வேற எதுவும் கிடையாது. இருந்தாலும், நட்பு ரீதியா இதெல்லாம் பண்ண முடியும், பண்ண முடியாதுனு சில விஷயங்கள் இருக்கு.

சிம்பு சார் என்னைக் கூப்டாலுமே, சந்தானத்துக்கு கேரக்டரா என்ன செய்ய முடியும் என்ற சுதந்திரம் எனக்கு கொடுத்திருக்காரு.

முன்ன மாதிரி பண்ணனும்னு கட்டாயப்படுத்தல. அந்த மாதிரி, உதய் சார் கூப்டாலும், இதெல்லாம் என்னால பண்ண முடியும்னு நான் சொல்ல முடியும். இது ஓகேனா நான் நிச்சயமா பண்ணுவேன்” என்று கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *