
சந்தானம் நடித்திருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தானம், இயக்குநர் பிரேம் ஆனந்த் என மூவரும் கலந்து கொண்டனர்.
‘கோவிந்தா’ பாடல் விவகாரம், `உயிரின் உயிரே’ பாடலில் கெளதம் மேனனை நடிக்க வைத்தது என அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் பேசியிருந்தார்.
இதே நிகழ்வில் ஆர்யா ‘சார்பட்டா பரம்பரை 2 ‘ திரைப்படம் தொடர்பாகவும், தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘வேட்டுவம்’ படம் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.

ஆர்யா பேசுகையில், ” ‘சார்பட்டா பரம்பரை 2’ ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இப்போது பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் தயாரிப்பாளர் என என்னுடைய பெயர் மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி வேலைகளையெல்லாம் கவனித்தது சந்தானம்தான். முதல் படப்பிடிப்பின் செலவை பார்த்ததும் ‘உண்மையான கப்பலில் எடுத்தால்கூட இவ்வளவு செலவு வந்திருக்காது’ என்றேன். ஆனால் அப்படியான தரம் படத்திற்குத் தேவைப்பட்டது.” என்றார்.