
ஸ்ரீவில்லிபுத்தூரில் 150 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கமிட்டிக்கு சொந்தமான மார்க்கெட்டை வைத்து இப்போது கிளம்பியுள்ள பிரச்சினையால் நூலகத்தின் தனித்தன்மைக்கே ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் வாசிப்பு ஆர்வலர்கள்.
1875-ல் திருநெல்வேலி ஆட்சியராக இருந்த பென்னிங்டன் என்பவரால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொது நூலகம் தொடங்கப்பட்டது. அவரது பெயராலேயே திறக்கப்பட்ட இந்த நூலகத்தின் நிர்வாகச் செலவுகளுக்காக வணிக வளாகம் ஒன்றும் பிற்பாடு கட்டப்பட்டது.