• May 13, 2025
  • NewsEditor
  • 0

கும்பம் – குருப்பெயர்ச்சி பலன்கள்

1. குரு பகவான் 5-ம் இடத்தில் அமரவுள்ளதால், இனி பல்வேறு யோகங்களை அருளப் போகிறார். மன நிலை, குணநிலை, உடல்நிலை அனைத்து வகையிலும் சந்தோஷம்  உண்டு. பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சொல்வாக்கு கூடும்.  

2. கோர்ட் வழக்குகள் சாதகமாகும். சொத்துப் பிரச்னையில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தடைகள் நீங்கி, மகளின் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறும். 

3. வருமானம் உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. அடகிலிருந்த வீட்டுப் பத்திரங்களை மீட்டெடுப்பீர்கள். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

கும்பம்

4. இனி, உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் தீரும்.

5. குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், விரக்தியும் தாழ்வு மனப்பான்மையும் விலகும். அகமும் முகமும் மலரும். செயல்களில் புது உத்வேகம் பிறக்கும். வி.ஐ.பிகளின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.

6. குரு பகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், தந்தையின் உடல்நிலை சீராகும். அவர்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. அவர் வழிச் சொத்துகள் கைக்கு வரும். எல்லா விஷயங்களிலும் செல்வாக்கு உண்டு. சேமிக்கும் அளவுக்கு பொருள் வரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

7. லாபஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், தொழில்-வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். புது முதலீடுகள் செய்வீர்கள். புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். 

8. இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மனைவிக்கு விலை உயர்ந்த பட்டுப் புடவை, தங்க ஆபரணம் வாங்கித் தருவீர்கள். அரசியவாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள்.

9. வியாபாரத்தில் புதிது புதிதாக வந்துள்ள போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். ஜூலை மாதத்துக்குப் பிறகு, புதிய முதலீடுகள் செய்வீர்கள். கணினி, உணவு, எண்டர்பிரைசஸ், கமிஷன் வகை களால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

கும்பம்

10. உத்தியோகத்தில், வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடன் பனிப்போர் நீங்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு, அரசாங்கப் பரிசு கிடைக்கும். 

11. தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் அருகிலுள்ள ஆழ்வார் திருநகரி, நவ திருப்பதிகளில் குருவுக்கு உரிய தலமாகும்.  இங்கு அருளும் ஆதிநாத பெருமாளுக்குத் துளசி சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். இன்னல்கள் நீங்கி, சகல சம்பத்துகளும் உண்டாகும்; எதிர்காலம் சிறக்கும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *