• May 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘‘இந்​திய மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்​கு, 10 சேட்​டிலைட்​கள் 24 மணி நேர​மும் பாகிஸ்​தானை கண்​காணித்து வரு​கின்​றன’’ என்று இந்​திய விண்​வெளி ஆய்​வுத் துறை தலை​வர் வி.​நா​ராயணன் உறு​தி​யாக கூறி​னார். திரிபுரா மாநிலம் அகர்​தலா​வில் உள்ள மத்​திய வேளாண் பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா கடந்த ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற்​றது. அதில் சிறப்பு விருந்​தின​ராக இந்​திய விண்​வெளி ஆய்​வுத் துறை (இஸ்​ரோ) தலை​வர் வி.​நா​ராயணன் பங்​கேற்​றார்.

அப்​போது மாணவர்​கள் மத்​தி​யில் அவர் பேசி​ய​தாவது: பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு இந்​தியா – பாகிஸ்​தான் இடையே பதற்​றம் நீடிக்​கிறது. இந்​நிலை​யில், இந்​திய நிலப்​பரப்பு மற்​றும் மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்கு இஸ்​ரோ​வின் 10 சேட்​டிலைட்​கள் பாகிஸ்​தானை 24 மணி நேர​மும் கண்​காணித்து வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *