
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மரக்கிளை விழுந்ததில், மூதாட்டிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர். செய்யாறு அடுத்த கழணிப்பாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் அருகில் நேற்று பணியில் ஈடுபட்டனர்.
வெயிலின் தாக்கத்தால் குளத்தருகே இருந்த ஆலமரத்தின் நிழலில் அவர்கள் ஓய்வெடுத்தனர். திடீரென ஆலமரத்தின் பெரிய கிளை முறிந்து, மரத்தடியில் அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்தது. இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த அன்னபூரணி (75) மற்றும் வேண்டா (65) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.