
புதுடெல்லி: பாகிஸ்தான் மீதான தாக்குதலின் போது அந்நாட்டு அணு ஆயுத கிடங்கை இந்திய ஆயுதப் படைகள் குறி வைக்கவில்லை என விமானப் படை அதிகாரி ஏ.கே.பார்தி கூறினார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் கடந்த மே 7-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானில் 4 இடங்களிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் 25 நிமிடங்கள் நீடித்தது. இதில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.