• May 12, 2025
  • NewsEditor
  • 0

‘புதிய அட்டவணை!’

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிவந்த பதற்றமான சூழல் ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இப்போது மீண்டும் எஞ்சியிருக்கும் போட்டிகளுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Operation Sindoor

‘நிறுத்தப்பட்ட ஐ.பி.எல்’

கடந்த 8 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி தரம்சாலாவில் நடந்து வந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியதால் போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டு வீரர்களும் ரசிகர்களும் பத்திரமாக மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். மறுநாள் ஐ.பி.எல் நிர்வாகத்தினர் கூடி பேசி ஐ.பி.எல் யை தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கும் முடிவுக்கு வந்தனர்.

இந்நிலையில், கடந்த மே 10 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல் யை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகளும் ஜரூராக ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்துதான் இப்போது புதிய அட்டவணை ஒன்றை ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

IPL
IPL

கடைசியாக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி உட்பட 17 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 17 ஆம் தேதி பெங்களூரு vs கொல்கத்தா போட்டியோடு ஐ.பி.எல் மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அஹமதாபாத் என 6 நகரங்களில் போட்டிகள் நடக்கிறது.

இறுதிப்போட்டி ஜூன் 3 ஆம் தேதி நடக்கிறது. ப்ளே ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டிக்கான இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை..சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையே சேப்பாக்கத்தில் நடைபெற வேண்டிய போட்டி டெல்லிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *