
`Dev.D’, `Black Friday’, `Gangs of Wasseypur’ படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.
நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
சமீபத்தில் இவர் நடித்திருந்த ‘மகாராஜா’, ‘Rifle Club’ படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தார். கொஞ்ச காலமாகவே அரசியல் குறித்தும் சினிமா உலகம் குறித்தும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
குறிப்பாக, பாலிவுட் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்த வண்ணமிருக்கிறார். சமீபத்தில், ‘பாலிவுட்டில் பிறக்காமல், தமிழ்நாடு, கேரளா எனத் தென்னிந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி எனக்குத் தோன்றும்’ என்று பேசியிருந்தார் .
இந்நிலையில் பான் – இந்தியா திரைப்படங்கள் என்பது ஒரு பெரும் ஊழல் என்று பேசியிருக்கும் அனுராக் காஷ்யப் , “பான் இந்தியா என்ற பெயரில் பெரிய பட்ஜெட்டில் 3-4 ஆண்டுகள் படமெடுக்கிறார்கள்.
படத்திற்கான பட்ஜெட் பணத்தைப் படமெடுப்பதில் செலவழிக்கிறார்களோ இல்லையோ, தேவையில்லாத பெரியப் பெரிய செட்கள் போடுவதிலேயே செலவழிக்கிறார்கள் சிலர்.
அப்படிப்பட்ட திரைப்படங்கள் 1% மட்டுமே வெற்றிபெறுகின்றன. பல திரைப்படங்கள் காணாமல் போகின்றன.
அதிகமான பணம் ‘பான் இந்தியா’ என்ற பெயரில் விணாடிக்கப்பட்டு பெரும் ஊழலே இங்கு நடக்கிறது.

‘பாகுபலி’படத்திற்குப் பல மொழிகளில் கிடைத்த வரவேற்பிற்குப் பிறகே இந்த பான் இந்தியா ட்ரெண்ட் பிரபலமானது. ‘பாகுபலி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றால் அதே மாதிரியான திரைப்படங்கள் எடுக்கிறார்கள்.
‘கே.ஜி.எஃப்’ நல்ல வரவேற்பைப் பெற்றால் தொடர்ந்து அதே மாதிரியான திரைப்படங்கள் எடுக்கிறார்கள். இப்படித்தான் ஒரே ட்ரெண்டிற்குப் பின்னாடி செல்கிறது நம் சினிமா துறை.
அது மாற வேண்டும். படத்தின் பட்ஜெட்டையும், பான் இந்தியாவா, இல்லையா என்பதையும் படத்தின் கதைதான் முடிவு செய்யவேண்டும். நாம் அந்த முடிவை எடுக்கக் கூடாது” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…