
புதுடெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) திங்கள்கிழமை காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, 32 விமான நிலையங்களும் இப்போது சிவில் விமான போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன.