• May 12, 2025
  • NewsEditor
  • 0

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு – காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலால் தொடங்கிய பரபரப்பு இன்று வரை இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் ஓயவில்லை.

இதற்கு பதிலடியாக, இந்தியா கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பதிலடி தாக்குதலைத் தந்தது. அதன் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை மேலும் அதிகரித்தது.

தொடர் தாக்குதல்கள், உயிரிழப்புகள் என இந்தியா – பாகிஸ்தான் எல்லை எங்கும் பதற்றம் நிலவியது.

காஷ்மிர் | இந்தியா – பாகிஸ்தான் எல்லை

இந்தக் குழப்பங்களுக்கு கடந்த சனிக்கிழமை முடிவு கொண்டு வரப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன. இருந்தும், பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லைகளில் தாக்குதல் நடத்தி வந்தது.

இந்த நிலையில், NDTV தகவலின்படி, “சமீபத்திய நாள்களில், ஜம்மு & காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைகளில் அமைந்திருக்கும் வேறு பகுதிகளில் நேற்று இரவு தான் அமைதியாகக் கழிந்துள்ளது. நேற்று எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை”.

இதே சூழல் தொடர வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *