
சென்னை: மும்மொழிக் கல்விக்கு எதிராக மே 20-ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக சார்பு அணி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: நீட், தேசியக் கல்விக் கொள்கை, விஸ்வகர்மா என தொடர்ந்து சமூகநீதியை அழிக்கும் மத்திய பாஜக அரசின் கொடுஞ்செயல்களை எதிர்கொள்ள திராவிட மாணவர் கழகத்தின் செயல் பாடுகளைத் தீவிரமாக்க வேண்டும். தமிழகத்தின் உரிமையை உச்சநீதிமன்றம் மூலம் மீட்ட முதல்வருக்கு பாராட்டு.