
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய முப்படைகளும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. அதன்பிறகு, இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியது.
ஆனால், அவை அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின. இந்த ஆகாஷ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி டாக்டர் பிரகலாத் ராமாராவ்தான் உருவாக்கி உள்ளார்.