• May 12, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)’ என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

Operation Sindoor

அதற்கடுத்த நாள் இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. நிலைமை மோசமான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதல் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மே 10-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

donald trump - டொனால்ட் ட்ரம்ப்
donald trump – டொனால்ட் ட்ரம்ப்

அதன்பின்னர், இருநாட்டின் அதிகாரிகளும் மோதல் நிறுத்தத்தை வெளிப்படுத்தினர். மேலும், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் லியோ வாட்டிகனில் நேற்று (மே 11) தனது முதல் உரையில், “இனி போர் வேண்டாம். இரண்டாம் உலகப்போர் முடிந்து 80 ஆண்டுகள் ஆகிறது. இப்போது மூன்றாம் உலகப்போரை நாம் துண்டு துண்டாக எதிர்கொள்கிறோம். அன்பான உக்ரைன் மக்களின் துன்பத்தை நான் என் இதயத்தில் சுமக்கிறேன். உக்ரைனில் உண்மையான நீடித்த அமைதி ஏற்படட்டும்.

புதிய போப் லியோ XIV
புதிய போப் லியோ XIV

காஸா பகுதியில் நடப்பது மிகவும் வேதனையளிக்கிறது. உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வரட்டும். அதோடு, அங்குள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படட்டும். அதேபோல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு மோதல் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன். மேலும், நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவில் ஒரு நீடித்த உடன்படிக்கை வரக்கூடும் என்று நம்புகிறேன்.” என்று பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *