• May 12, 2025
  • NewsEditor
  • 0

மிதுனம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2025

1. மிதுன ராசிக்கு ஜென்ம குரு காலம் இது. என்றாலும் குரு பகவானின் பார்வை பலன்கள் ஓரளவுக்கு உங்களுக்குச் சாதகமாகவே அமையும். பூர்விகச் சொத்து, பிள்ளைகள் கல்யாணம்,  ஓரளவு பணவரவு என்று நன்மைகள் நடக்கும். 

2. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிறரிடம் கொடுத்து ஏமாந்த பணம் கைக்கு வரும். அதேநேரம், பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவசரப்பட்டு வாக்குறுதி அளிக்கவேண்டாம்.

3. எதிர்பார்த்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டு. வெளியூர், வெளிநாடுகளில் இருக்கும் அன்பர்கள் மூலம் சுபச் சேதி கிடைக்கும். எந்தவொரு காரியத்திலும் திட்டமிட்டு செயலாற்றினால், வீண் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். 

மிதுனம்

4. ஜன்ம குரு என்பதால், சில தருணங்களில் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு. மனதுக்குள் சலிப்பு, சோர்வு, முன்கோபம் வந்து நீங்கும்.  வீட்டில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்படும். எனினும் சமாளித்து மீள்வீர்கள். ஆரோக்கியத்தில் அலட்சியம் கூடாது; நிறைய தண்ணீர் அருந்துவது அவசியம்.

5. குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டு. குழந்தை வேண்டி காத்திருக்கும் அன்பர்களுக்குக் குழந்தைப் பேறு வாய்க்கும்.  பூர்விகச் சொத்துக்கள் வந்து சேரும். அதன் மூலம் ஆதாயமும் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு வீடு வாங்கும் அமைப்பு உண்டு. மகளுக்குக் கல்யாணம் கூடிவரும்.

6. குரு பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் ஓரளவு நெருக்கம் உண்டு. கடினமான பணிகளில், முயற்சிகளில் உங்களின் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்திச் சாதிப்பீர்கள். வீட்டில் தாமதமான சுபநிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். 

7. உங்கள் ராசிக்குப் பாக்கிய வீடான 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்க்கும் அளவிற்கு பணம் வராவிட்டாலும் கடைசி நேரத்தில் ஓரளவு கிடைக்கும். செலவுகளும் உண்டு. 

8. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது. திடீரென்று புதிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். அப்படியான வாய்ப்புகளைத் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வீண் விமர்சனங்கள் பின்னடைவை ஏற்படுத்தலாம். 

9. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சந்தை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பெரிய முதலீடு செய்யுங்கள். புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். கெமிக்கல், ஹோட்டல், துணி வகைகளால் லாபம் உண்டு. 

மிதுனம்

10. உத்தியோகத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணி நிமித்தமான தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் பதவி, சம்பளம் உயரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் நினைத்ததை முடிப்பீர்கள். கலைஞர்கள் விமர்சனங்களைப் புறந்தள்ளவும். 

11. புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி (காரையூர் வழி) செல்லும் வழியில், சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது குமரமலை. சஷ்டி தினங்களில் இங்குள்ள குமரனை  ஆராதித்து, விபூதிப் பிரசாதம் பெற்று வந்து, நாள்தோறும் அணிந்துகொள்ளுங்கள்.  சங்கடங்கள் எல்லாம் காணாமல்போகும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *