
பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் என பிரதமர் மோடி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு தண்டனை அளிக்கும் வகையில், கடந்த மே 7-ம் தேதி ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளுக்குமிடையில் தீவிர மோதல் ஏற்பட்டது. போர் நிறுத்தத்தை மீறும் வகையில் மே 10-ம் தேதி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்தியா தக்க பதிலடி வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய 30 நிமிடங்கள், முக்கிய தீவிரவாத முகாம்களில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியதாகக் வியோ நியூஸ் தளம் தெரிவிக்கிறது.
யாருடைய மத்தியஸ்தமும் தேவையில்லை!
இந்தியா – பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை நீண்டநாட்களாக நிலவுவதனால், அமெரிக்க தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய தயார் என ட்ரம்ப் அறிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ட்ரம்ப்பின் அறிவிப்பை வரவேற்றார். ஆனால் இந்தியா தரப்பில் யாருடைய மத்தியஸ்தமும் தேவையில்லை எனத் தெளிவாகக் கூறப்பட்டதாக இந்தியா டுடே தளம் தெரிவிக்கிறது.
இந்திய அரசுத் தரப்பில், “காஷ்மீரைப் பொருத்தவரை எங்களுக்கு ஆக்கிரமிக்கப்பட்ட கார்மீரை (POK) மீட்பது மட்டுமே ஒரே நிலைப்பாடு. அதைப் பற்றி பேச வேறெதுவும் இல்லை. அவர்கள் தீவிரவாதிகளை ஒப்படைப்பது குறித்துப் பேசினால் நாமும் பேசலாம். வேறெந்த தலைப்பையும் விவாதிக்க இந்தியாவுக்கு ஆர்வம் இல்லை. யாரு மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை, அது தேவையுமில்லை” எனக் கூறப்படுவதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.