• May 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரின் பக்​ஸர் மாவட்​டம் நந்​தன் கிராமத்​தைச் சேர்ந்த சிப்​பா​யான தியாகி யாதவ் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பணியாற்றி வரு​கிறார். அவர் தனது திரு​மணத்​திற்​காக விடுப்பு எடுத்​துக் கொண்டு பக்​ஸர் வந்​திருந்​தார். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்​தது.

இதனிடையே, பஹல்​காம் தாக்​குதலுக்கு பின் எல்​லை​யில் பாகிஸ்​தானுடன் போர் தொடங்கி விட்​டது. இதனால், இந்​திய ராணுவம் தனது வீரர்​களின் விடுப்பை ரத்து செய்​து, உடனடி​யாக பணிக்கு திரும்​பு​மாறு அறி​வுறுத்​தி​யது. இதை ஏற்று திரு​மண​மான மறு​நாளி​லேயே பணிக்கு கிளம்பி விட்​டார் தியாகி யாதவ்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *