• May 12, 2025
  • NewsEditor
  • 0

1. தற்போது உங்களுக்கு ஜென்மகுரு விலகுவது மிகவும் சிறப்பம்சம்.  இதுவரையிலும் இருந்துவந்த பிரச்னைகள் யாவும் மெள்ள விலகும். இப்போது குரு பகவான் 2-ம் இடத்துக்கு வருவதால், நிம்மதி பிறக்கும். தடைகள் விலகும். 

2. வீட்டிலும் வெளியிலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். முயற்சிகளில் இருந்துவந்த தேக்கநிலை மாறி, இனி எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து கூடும். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

3. குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ரத்த அழுத்தம், வாயுக் கோளாறு போன்ற பாதிப்புகள் நீங்கி தேக ஆரோக்கியம் கூடும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்களுடன் உரசல் போக்கு நீங்கும்.

ரிஷபம்

4. குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்ப்பதால், கடன் பிரச்னைகள் கட்டுப் பாட்டுக்குள் வரும். அடகு நகைகளை மீட்கும் வாய்ப்பு கிடைக்கும். மறைமுக எதிரிகளும் துரோகிகளும் அடங்குவார்கள். வதந்தி, வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.

5. குருபகவான் 8-வது வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் கூடி வரும். விசா கிடைக்கும். 

6. குரு பகவான் 10-வது வீட்டைப் பார்ப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். பிரபலங்களின் நட்பும் அவர்கள் மூலம் ஆதாயமும் உண்டாகும்.  சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒருசிலர் புதுத் தொழில் தொடங்கி, அதில் வெற்றி பெறுவார்கள். ஏற்கெனவே  இருக்கும் தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

7. அரசியல்வாதிகள் தலைமையுடன் நெருக்கமாக இருப்பார்கள். அவர்களுக்குப் பதவிகள் தேடி வரும். எனினும் வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். ஆதாரம் இல்லாத விஷயங்களைப் பெரிதாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.

8. உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். அதேநேரம் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் உண்டு.

9. வியாபாரத்தில், வியாபார ஸ்தலத்தை உங்கள் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைப்பீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். அதனால் வருமானம் உயரும். வருடப் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். கெமிக்கல், கமிஷன், ஹோட்டல், பைனான்ஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச்சென்ற பங்குதாரர்கள் தேடி வருவார்கள். 

ரிஷபம்

10. உத்தியோகத்தில், குறை கூறிக்கொண்டிருந்த மேலதிகாரி, இனி  உங்களின் திறமையை அறிவார். உங்களுக்குச் சாதகமாகச் செயல்பட ஆரம்பிப்பார். அவரின் பரிபூரண ஆதரவு, உங்களுக்கு முன்னேற்றம் தரும். பதவி உயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். கணினித் துறையினர், இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள்.

11. நாகர்கோவிலில் இருந்து களியக் காவிளை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தெங்கரை. இங்கே, நெடுஞ்சாலை யிலிருந்து வலப்புறம் திரும்பும் பாதையில்  சிறிது தூரம் பயணித்தால், வேளிமலை குமரன் கோயிலை அடையலாம். உங்களின் ஜன்ம நட்சத்திர நாளில், இவ்வூர் முருகனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *