
சென்னை: தற்போதைய நிலை என்பது புரிந்துணர்வுதான்; போர் நிறுத்தம் அல்ல என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியா 90 நிமிடங்களில் பாகிஸ்தானின் பல விமான தளங்களை குறிவைத்து தாக்கியது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை. இந்த துல்லிய, முன்னெச்சரிக்கை தாக்குதல் பாகிஸ்தான் விமானப் படையின் பலத்தை, தேசிய பாதுகாப்பின் ஒருங்கிணைப்பை, எதிர் தாக்குதலுக்கான தயார் நிலையை பலவீனமாக்கியதோடு, ராணுவத்தின் உறுதியை குலைத்தது.