
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் மே 7ல் இந்தியா குறிவைத்த 9 பயங்கரவாத இலக்குகளில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், "ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட கொடூரமாக கொல்லப்பட்ட விதத்தை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்தக் கொடூரமான காட்சிகளையும், குடும்பங்களின் வலியையும், நமது ஆயுதப் படைகள் மற்றும் பொதுமக்கள் மீதான சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களையும் பார்க்கும்போது ஒரு தேசமாக நமது உறுதியை மீண்டும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நாங்கள் அறிவோம்.