நடிகை மீனாட்சி சௌத்ரி தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் பற்றி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.
‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மீனாட்சி சௌத்ரி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது என்று கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், “ ஐபிஎல்லில் குறிப்பிட்டு இந்த அணியைத்தான் பிடிக்கும் என்பதெல்லாம் இல்லை. ஆனால் தோனி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

தோனி எந்த அணியில் விளையாடினாலும் அந்த அணி எனக்கு பிடிக்கும். தோனியைப் பிடிக்க ஆரம்பித்ததால் தான் நான் கிரிக்கெட்டைப் பார்க்கத் தொடங்கினேன்” என்று கூறியிருக்கிறார்.