
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’, ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ ஆகிய படங்கள் இந்தி மார்க்கெட்டை குறிவைத்து புதிய ஒப்பந்தத்தில் களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய அளவில் பிவிஆர்- ஐநாக்ஸ், சினிபோலிஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக மல்டி பிளக்ஸ் திரையரங்குகளை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள், தென்னிந்தியாவில் இருந்து பான் – இந்தியா முறையில் வெளியாகும் படங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதில் ஒன்று, திரையரங்கில் படம் வெளியாகி, 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட வேண்டும் என்பது. இதை
ஏற்றுக்கொண்டால் மட்டுமே வட இந்தியாவில் அதிக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை வைத்திருக்கிற இந்நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட படங்களின் இந்திப் பதிப்பை திரையிடும். அப்படித்தான் ‘புஷ்பா’ உள்பட சில படங்கள் அங்கு வெளியாகின.