
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் நேற்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் இந்திய எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி அத்துமீறலில் ஈடுபட்டது. இந்நிலையில், இன்று காலை முதல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலத்தில் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை என்ற தகவல் களத்தில் இருந்து கிடைத்துள்ளது. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
போர் பதற்றத்தை அடுத்து முன்னெச்சரிக்கை கருதி இந்த மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தடைகளும் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் இன்று காலையில் திரும்ப பெற்றுள்ளது. இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.