நடிகை மீனா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றரைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மக்கள் இந்த சினிமா மூலமான ஈர்ப்பையும், வெளிச்சத்தையும் மட்டுமே அறிவார்கள். ஆனால், என்னுடைய இந்த சிறந்த தருணங்கள் எல்லாவற்றுக்கு பின்னாலும் என்னுடைய அம்மா இருந்தார்.
அவர்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தார். இப்போது குட்டி சக நடிகையான என்னுடைய மகள் அந்த இடத்தில் இருக்கிறார். ஒரு மகளாக இருந்ததன் மூலம் நான் நிறைய வலுவடைந்திருக்கிறேன்.
ஒரு தாயாக இருப்பதன் மூலம் எதுவுமே என்னை தடுக்க முடியாத நிலையை எட்டியிருக்கிறேன்.

இந்த அன்னையர் தினத்தில் ஒரு மகளாக நான் வளர்ந்த நாட்களையும் ஒரு தாயாக என் மகளை வளர்க்கும் நாட்களையும் மனம் மகிழ கொண்டாடுகிறேன். Lights, Camera, Unconditional Love” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…