
புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்திருக்கும் நிலையில், காஷ்மீர் பிரச்சினை 1000 ஆண்டுகால பிரச்சினை இல்லை, மாறாக அது 78 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது என்று காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி தெரிவித்தார்.
இதுகுறித்து மணிஷ் திவாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்காவில் உள்ள யாராவது அவர்களது அதிபர் ட்ரம்புக்கு காஷ்மீர் பிரச்சினை 1,000 ஆண்டுகால பிரச்சினை இல்லை என்று தீவிரமாக எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும்.