
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.
இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.
இதனால் பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது.
தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்று(மே 10) மாலை இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் முதலில் அறிவித்திருந்தார்.
மேலும் ‘அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை ஏற்று தாக்குதலை நிறுத்தியதற்கு நன்றி’ என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் அமெரிக்கா தலையீடு செய்தது குறித்து காங்கிரஸ் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

“சண்டை நிறுத்த அறிவிப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் கூறும் முன்பாகவே அமெரிக்கா வெளியிடுகிறது.
இரு நாடுகள் பிரச்னையில் ‘நடுநிலை’ என்ற அமெரிக்காவின் கருத்து, பல கேள்விகளை எழுப்புகிறது.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய, நாம் கதவுகளை திறந்து விட்டுள்ளோமா?.
இது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி உடனே அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs