• May 11, 2025
  • NewsEditor
  • 0

‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில், சூரியாவின் 2D நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’.

இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரேம்குமார் ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார்.

மெய்யழகன்

இந்நிலையில் இயக்குநர் பிரேம்குமாரின் கனவு வாகனமான வெள்ளை நிற மஹேந்திரா தார் ( THAR) காரை சூர்யாவும், கார்த்தியும் பரிசாக வழங்கி இருக்கின்றனர்.

இதுகுறித்து பிரேம்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில் “மஹிந்திரா தார் எனக்கு எப்போதும் ஒரு கனவு வாகனமாக இருந்தது. குறிப்பாக வெள்ளை நிறத்தில் தார் ராக்ஸ் AX 5L 4×4 வேரியண்ட்டை நான் விரும்பினேன்.

ஒரு கட்டத்தில் சூழ்நிலைகள் மாறி, தேவைகள் அதிகரித்தபோது, ​​தார் ராக்ஸிற்காக நான் சேமித்ததை செலவிட வேண்டியிருந்தது. கனவு வெகுதூரம் நகர்ந்தது.

பிரேம்குமார்
பிரேம்குமார்

நேற்று முன்தினம் சூர்யா அண்ணன் எனக்கு ஒரு வெள்ளை தார் ராக்ஸ் AX5L 4×4-ன் புகைப்படத்தை அனுப்பினார், அதில் ‘வந்துவிட்டது’ என்ற குறுஞ்செய்தியும் இருந்தது. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

லட்சுமி இல்லத்துக்கு அழைக்கப்பட்டேன். கதவுகள் திறந்ததும், என்னுடன் நீண்ட பயணத்தைத் தொடங்க ஒரு கம்பீரமான வெள்ளை தார் ராக்ஸ் AX 5L 4×4 காரும் காத்திருந்தது தெரிந்தது.

அதன் அருகில் என் அன்பான மெய்யழகன் கார்த்தி நின்று கொண்டிருந்தார், அவர் என் கனவுகளைத் திறக்க சாவியை ஒப்படைத்தார்.

நான் முற்றிலும் நம்ப முடியாமல் நின்றேன். நாங்கள் ஒரு சிறிய ரைட் சென்றோம். பின்னர் நான் தார் காரை என் அலுவலகத்திற்குக் கொண்டு வந்தேன்.

இரண்டு நாட்கள்தான் ஆகிறது, ஆனாலும் நான் குறைந்தது 50 கி.மீ. ஓட்டிவிட்டேன். இதை இன்னும் ஒரு கனவு போல உணர்கிறேன்.

இதை எனக்குத் தரப்பட்ட ஒரு பரிசாக நான் பார்க்கவில்லை. ஒரு தம்பியின் கனவை அண்ணன்கள் நிறைவேற்றியதாகப் பார்க்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *