
மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரவசத்துக்கு 70 என தேசிய அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 39 ஆக குறைந்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து, தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பது, கள பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மருத்துவம் சார்ந்த அணுகுமுறைகள், கொள்கை சீர்திருத்தங்கள், சமூக பங்களிப்பு குறித்த பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: