
நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட விவசாயி சின்னத்தில் கரும்புக்கு பதிலாக ஏர் கலப்பை இடம்பெற்றுள்ளது.
நாம் தமிழர் இயக்கமாக இருந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி, இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வந்தாலும், வாக்கு சதவீதம் மட்டும் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது.