
இந்தியாவின் முக்கிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் செலுத்திய‌ ஏவுகணைகளையும், வான் பாதுகாப்பு ரேடார்களையும் வானிலே தாக்கி அழித்த தற்கொலை படை ட்ரோன்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த ட்ரோன்கள் பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட ‘‘ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ்’’ ட்ரோன்கள் என தெரியவந்துள்ள‌து.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பாதுகாப்பு படைகள் மேற்கொண்டுள்ள 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட தற்கொலை படை ட்ரோன்கள் முக்கிய பங்காற்றியுள்ள‌ன. பாகிஸ்தான், இந்தியா மீது ஏவிய ஏவுகணைகள், பாக், வான் பாதுகாப்பு ரேடார்களையும் தாக்கி அழித்ததில் ஆளில்லா தற்கொலை படை ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே ஆகிய இடங்களில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களையும் துல்லியமாக தாக்கி அளித்தன.