
‘அமைதி உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான்!’
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் இன்று இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்திய பகுதிகளை தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
‘மத்திய அரசு விளக்கம்!’
இதுசம்பந்தமாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது, ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று மாலை ஒரு அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது. கடந்த சில மணி நேரங்களாக அந்த உடன்படிக்கையை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய ராணுவம் அவர்களின் விதிமீறலை வலுவாக எதிர்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் இந்த விதிமீறிய தாக்குதல் கண்டனத்துக்குரியது. பாகிஸ்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். நிலைமையை உணர்ந்து பாகிஸ்தான் இந்த விஷயத்தில் பொறுப்பாக நடந்து விதிமீறலை நிறுத்த வேண்டும்

நம்முடைய வீரர்கள் விழிப்புணர்வோடு தக்க பதிலடியை கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறும்பட்சத்தில் இன்னும் வலுவாக பதிலடியை கொடுக்கவும் ராணுவத்தை வலியுறுத்தியிருக்கிறோம்.’ என்றார்.