
புதுடெல்லி: எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இந்தியாவுக்கு எதிரான போர்ச் செயலாகக் கருதப்படும் என்றும், அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா முடிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 10) ஈடுபட்டார். பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர், முப்படைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.