• May 10, 2025
  • NewsEditor
  • 0

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தின கொண்டாட்டத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத், மே 08 முதல் 09 வரை ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றி தின கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார். இரண்டாம் உலகப் போரில் (1941-45) சோவியத் யூனியன் பெற்ற வெற்றியின் 80-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 2025 மே 09 அன்று மாஸ்கோவில் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *