• May 10, 2025
  • NewsEditor
  • 0

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து பேசிவந்தது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொடர்ந்து இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மோடி – ட்ரம்ப்

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் சமூக ஊடகப் பக்கத்தில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டன. இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!” எனப் பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் தன் எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக ஒரு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல் தன் எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி

அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான ராணுவ நடவடிக்கைகளுக்கான இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMO-வை அழைத்தனர். இரு தரப்பினரும் நிலத்திலும், வான்வழி மற்றும் கடல்வழியிலும் அனைத்து துப்பாக்கிச்சூடுகளையும், ராணுவ நடவடிக்கைகளையும் இந்திய நேரப்படி 17:00 மணி முதல் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது.

இன்று, இந்த புரிதலை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் மே 12-ம் தேதி மதியம் 12:00 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *