
சண்டிகர்: இந்தியா – பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சண்டிகர் நிர்வாகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் தொகுதி சிவில் பாதுகாப்பு தன்னார்வளர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி தாகூர் அரங்கில் தொடங்கியுள்ளது. தன்னார்வலர்கள் அனைவரும் விரைவில், செக்டார் 17-ல் உள்ள திரங்கா பூங்காவில் கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருங்கிணைந்த பயிற்சி அமர்வுக்கு சரியான நேரத்திலான உங்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானதாகும்.” என்று தெரிவித்துள்ளது.