• May 10, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானின், பச்சோரா தாலுகாவில் உள்ள புங்கானைச் சேர்ந்தவர் மனோஜ் தியானேஷ்வர் பாட்டீல். இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். மே 5 திங்கட்கிழமை பச்சோரா தாலுகாவில் உள்ள கலாம்சாரா கிராமத்தைச் சேர்ந்த யாமினி என்றப் பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடந்தது. அதற்கு அடுத்த நாள் இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்த மோதல்போக்கு தாக்குதலாக தொடங்கியது. அதனால், 8-ம் தேதி மீண்டும் ராணுவப் பணியில் இணைந்துகொள்ள வேண்டும் என மனோஜ் தியானேஷ்வர் பாட்டீலுக்கு ராணுவம் உத்தரவிட்டது

அதனால் அவர் மே 8 வியாழக்கிழமை மீண்டும் ராணுவத்துக்குப் புறப்பட்டார். அவரை மணமக்கள் வீட்டார் ரயில் நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைத்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது.

அப்போது மணமகள் யாமினி பாட்டீல், “நாட்டை விட எதுவும் பெரியதல்ல. நான் எப்போதும் என் கணவருடன் இருக்கிறேன். இப்போது நாட்டைப் பாதுகாக்க என் சிந்தூரத்தை (குங்குமத்தை) அனுப்புகிறேன்.” எனப் பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *