• May 10, 2025
  • NewsEditor
  • 0

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ”இந்தியா – பாகிஸ்தான் இடையேயான  பிரச்னை இன்று நேற்று அல்ல, பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாத மையத்தைதான் தாக்குகிறோம்.

அண்ணாமலை

அறத்தின் அடிப்படையில்..!

ஆனால், இந்தியாவில் மக்கள்  மீது போர் தொடுக்கிறார்கள். நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் கோழைகள். இந்தியாவைப் பொறுத்த அளவில் அறத்தின் அடிப்படையில் இருக்கிறோம். பாகிஸ்தான் நம் மீது தொடுக்கும் ட்ரோனுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றோம். நம் நாடு மிகப்பெரிய பொருளாதார நாடு. இந்தியாவின் பொருளாதாரம் 12 என்றால் பாகிஸ்தான் 1-ல்தான் உள்ளது.

பாகிஸ்தானுடன் சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எறிய வேண்டும் அதற்காகத்தான் இந்த போர். இனி இந்தியாவில் ஒரு உயிர் எடுப்பதற்கு பாகிஸ்தான் பலமுறை யோசிக்க வேண்டும். பாகிஸ்தானைப் பொறுத்த அளவில் நாடு அதன் கட்டுப்பாட்டில் இல்லை. பாகிஸ்தான் என்ற ஒரு நாடு வரைபடத்தில் இருக்காது.

அண்ணாமலை

நாம் அவ்வளவு பலமாக இருக்கிறோம். நாம் நினைத்தால் ஒன்றும் இல்லாமல் பண்ணி விடலாம். ஆனால் அறத்தின் அடிப்படையில் போர் தொடுத்து வருகின்றோம். சசிதருர் எம்.பி இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு  ஆதரவு தெரிவித்து வருகிறார். பாகிஸ்தானை எதிர்ப்பதில் தி.மு.க உட்பட அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்திய அரசிற்கு முழுமையாக தன்னுடைய ஒத்துழைப்பையும் திமுக அரசு கொடுக்க வேண்டும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *