
புதுடெல்லி: இந்தியாவுக்குள் 36 இடங்களை குறிவைத்து தாக்குவதற்காக பாகிஸ்தான் செலுத்திய 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ராணுவம் வெற்றிகரமாக அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி விவரித்துள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிந்தைய பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் பங்கேற்று கடந்த 7-ம் தேதி பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும், அதற்கு இந்திய ராணுவம் அளித்து வரும் பதிலடி குறித்தும் விளக்கம் அளித்தனர்.