
மாமல்லபுரம்: பாமக சார்பில் ஞாயிறன்று நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும், காவல் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முழு கட்டுப்பாடுடன், இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் வந்து செல்ல வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், அந்த இடத்தில் மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.