
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
வட்ட அதிகாரிகள் (Circle Based Officers)
மொத்த காலியிடங்கள்: 2,600; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ஆரம்ப சம்பளம் ரூ.48,480
கல்வித் தகுதி என்ன வேண்டும்?
எதாவது ஒரு பட்டப்படிப்பு
குறிப்பு: உள்ளூர் மொழியை கட்டாயம் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு, ஸ்கிரீனிங், நேர்காணல் மற்றும் உள்ளூர் மொழித் திறன்.
ஆன்லைன் தேர்வு எப்போது?
ஜூலை 2025
ஆன்லைன் தேர்வு எங்கு நடத்தப்படுகிறது?
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
புதுச்சேரி.
விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsonline.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 29, 2025
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.