
புதுடெல்லி: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி அழித்தது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். மத்திய அமைச்சர்கள், அமித்ஷா, ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.