
சென்னை: “மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல,” என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக, அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, தேசிய கல்விக் கொள்கைப்படி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.